ஈரோட்டில் சனிக்கிழமை அன்று காவிரி விவசாயிகள், பயனாளிகள் மாநாடு
இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:


காவிரி விவசாயிகள், பயனாளிகள் மாநாடு ஈரோட்டில் சனிக்கிழமை (மார்ச் 28-ம் தேதி) நடைபெறுகிறது.
இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
உலகின் சராசரி மழை அளவு 950 மி.மீ. இந்தியாவின் சராசரி 1,250 மி.மீ. ஓராண்டு மொத்த நீர்வளம் 70,000 டி.எம்.சி. இதில் பயன்பாடு 20,000 டி.எம்.சி. மட்டும்தான். மீதமுள்ள 50,000 டி.எம்.சி. நீர் பயன்பாடின்றி வீணாக கடலில் கலக்கிறது.
ஒரே நேரத்தில் ஒரு பகுதிக்கு வறட்சி நிவாரணம், மறுபகுதிக்கு வெள்ள நிவாரணம். விவசாய நாட்டுக்குள் வேளாண் விளைபொருள்களின் இறக்குமதி தொடர்வதும் வழக்கமாகிவிட்டது. இது ஒரு தேசிய அவமானம். இவற்றை போக்கினால் மட்டும்தான் நாடு வல்லரசாகும்.
தமிழ்நாடு மழை மறைவு மாநிலம். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மழை பொழிவு மாநிலங்கள். தமிழகத்தின் ஓராண்டு நீர்வளம் 833 டி.எம்.சி. மட்டும்தான். அதேநேரத்தில் கர்நாடக நீர்வளம் 3,475 டி.எம்.சி. நேத்ராவதி உள்ளிட்ட 13 ஆறுகள் வழியாக அரபிக் கடலில் பயன்பாடு இல்லாமல் கடலில் கலந்து வரும் நீரின் அளவு 2,000 டி.எம்.சி. நேத்ராவதி வடிநிலத்தில் இருந்து ஹேமாவதிக்கு 200 டி.எம்.சி. தண்ணீரை திருப்பினால், காவிரி பிரச்னை காணாமல் போகும். கடைமடை உரிமை காக்கப்படும்.
ஆறுகளை திருப்பினால் சூழல் பாதிக்கப்படும் என்கிறார்கள். அதேநேரத்தில் சீனாவின் துயரம் மஞ்சள் நதி. 1990-க்கு பிறகு இதன் குறுக்கே மிகப்பெரிய அணையை கட்டி, வெள்ளத்தை கட்டுப்படுத்தி, பாசனத்துக்கும், மின்உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, கர்நாடகத்தில் கடலில் கலக்கும் நீரை தமிழக்ததுக்கு திருப்பிவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் காவிரி விவசாயிகள் மற்றும் பயனாளிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு அரசியல்கட்சி பிரமுகர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மாநிலம் முழுவதும் இருந்து 10,000 விவசாயிகள் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...