அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

விருதுநகர் அருகே தொழிற்சாலையில் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் பாய்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On :28 மார்ச் 2013, 11:48 am

விருதுநகர் அருகே தொழிற்சாலையில் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் பாய்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பி்ல் கூறியதாவது: விருதுநகர் அருகே பெரிய பேராலி சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருள்கள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அருப்புக்கோட்டை அருகே திருநகரத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் முத்துவீரன்(19) வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் புதன்கிழமை இரவு பணி செய்வதற்கு ஆலைக்கு வந்தார். அங்குள்ள மோட்டாரை இயக்கும் போது வயரில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென மின்சாரம் பாய்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சையளித்தும், பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் தம்பி முத்துக்குமார் புகார் செய்தார். அதன் பேரில்  போலீஸார் எலெக்ட்ரிசியன் வசந்தகுமார், மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.