/

ஏப்.25-ல் சாலைமறியல் நடத்த கடலூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கம் முடிவு

சிதம்பரம் ஆறுமுகநாவலர் நிலையத்தில் கடலூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் கூடட்ம் நடைபெற்றது. எம்.எஸ்.ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.வெங்கடேசன், எஸ்.ஜான்பீட்டர், ஆர்.தட்சிணாமூர்த்தி, எஸ்.கே.சிவக்குமார், ஜி.கணேசமூர்த்தி, ஜி.ஆசைதம்பி, ஜமால்முகமது, டி.தண்டபாணி, நடராஜன்,

News image
Updated On :31 மார்ச் 2013, 12:24 pm

G.Sundararaj

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்.25-ல் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என ரடலூர் நாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சிதம்பரம் ஆறுமுகநாவலர் நிலையத்தில் கடலூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் கூடட்ம் நடைபெற்றது. எம்.எஸ்.ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.வெங்கடேசன், எஸ்.ஜான்பீட்டர், ஆர்.தட்சிணாமூர்த்தி, எஸ்.கே.சிவக்குமார், ஜி.கணேசமூர்த்தி, ஜி.ஆசைதம்பி, ஜமால்முகமது, டி.தண்டபாணி, நடராஜன், வேலு, ஜவகர், ஆர்.முத்து, எஸ்.எம்.குமார், எல்.லதா, ஜி.ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுர் கேபிள் டிவி ஆப்பட்டரேர்களை அடிமைக்க வைத்திருக்கும் தலைமை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் (MSO) பேச்சைக் கேட்காமல் உடனே அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்துவது, கடலூர் மாவட்டதத்தில் உள்ள அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு பகுதிகளுக்கு உடனே அரசு சிக்னல் கொண்டு வர வேண்டும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சரியாக பணம் செலுத்தும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு தடையில்லா சிக்னல் தர அரசு உத்திரவிட வேண்டும், அனைத்து MSO-க்கள் கட்டுப்பாட்டு அறைகளை, அரசு கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வர வேண்டும், உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களிடம் சர்வீச் சார்ஜ் வசூலிக்கும் சேவைக் கட்டணத்தை தடுத்து நிறுத்திட வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிடில் வருகிற ஏப்.25-ல் சிதம்பரம்-சீர்காழி சாலையில், சாலைமறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.