மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஜெ.அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின்வெட்டு அதிகரிப்பு:தேமுதிக மாவட்டச் செயலாளர் ஆர்.பாண்டியன்

தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின்வெட்டு அதிகரித்து பொதுமக்கள் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என

News image
Updated On :31 மார்ச் 2013, 4:49 am

விஜயக்குமார்

தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின்வெட்டு அதிகரித்து பொதுமக்கள் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என தேமுதிகவின் கோவை மாவட்டச் செயலாளர் பாண்டியன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையிலிருந்து 6 மாத காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பெ.நா.பாளையம் ஒன்றிய தேமுதிக சார்பில் என்.ஜி.ஜி.ஓ காலனியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளரும்,குருடம்பாளையம் ஊராட்சித் துணைத் தலைவருமான கார்த்திக் முன்னிலை வகித்தார்.

இதற்கு தலைமை வகித்து செயலாளர் பாண்டியன் பேசியது.எம்.எல்.ஏக்களை தங்களுடைய தொகுதி பிரச்னைகளை பேசக்கூட விடவில்லை.இது ஜனநாயக விரோதமாகும்.ஜெ.அரசின் அராஜகப் போக்கினால் எதிர்கட்சிகள் நசுக்கப்படுகின்றன.கடும் மின்வெட்டு,ஊழல்,எல்லா நிலைகளிலும் லஞ்சம் ஆகியவற்றினால் பொதுமக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கின்றனர்.அடக்குமுறையின் காரணமாக மாற்றுக்கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட வாய்திறக்க பயப்படுகின்றனர்.இதற்கெல்லாம் பயப்படாமல் தேமுதிக எப்போதும் மக்கள் பிரச்னைகளுக்காகரப் போராடும் என்றார்.தொடர்ந்து மாநில மருத்தவ அணிச் செயலாளர் டாக்டர் வி.ஆர்.ஈஸ்வரன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பெ.நா.பாளையம் ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி,பொருளாளர் வி.எம்.வைரவன்,நகரச் செயலாளர்கள் பிரதீப் கந்தசாமி,வக்கீல் பிரபு,ஆர்.பூமிதரன் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ராஜன்,ஆர்.பால்சந்த்,ஆர்.மணிகண்டன்,ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,எஸ்.ராஜகோபால்,எஸ்.ரவிக்குமார்,ஆர்.கௌரிநாதன்,டி.சி.தேவராஜன் தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகள் சி.துரைசாமி,சி.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் அசோகபுரம் ஊராட்சிச் செயலாளர் அருள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.