/

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு: முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இதை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :8 மே 2013, 6:26 am

ச.​ கார்த்​தி​கே​யன்

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இதை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரிஷிவந்தியம் கே.பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசாமி. இவரது மகன் கௌதம் (4). விடுமுறை என்பதால் சிறார்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் எதிரில் கரும்பு ஏற்ற நின்றிருந்த லாரி அருகே அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, லாரி ஓட்டுநர் எதிர்பாராத விதமாக லாரியை எடுக்க முயன்றார். அப்போது, லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடலைக் கைப்பற்ற வந்த காவல் துறையினரைக் கண்டித்தும், லாரியை சிறைப்பிடித்தும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.