பாமக தலைவர் ஜிகே மணி, இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த ஜனவரியில் அனைத்து சமுதாய மாநாட்டை கடலூரில் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனைஎதிர்த்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாமகவினர். அதே நாளில் எதிரில் அதிமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஒரு மாநாடு நடைபெற்றது. இதில், இருதரப்பும் மோதிக்கொண்டது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜி.கே.மணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ன் நீதிபதி பிரபா உத்தரவிட்டிருந்தார். இன்று அவர் நீதிபதி முன் ஆஜரானார். இதில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கெனவே 5 வழக்கில் ஜாமீன் பெற்றுவிட்டதால், இன்று மாலை அவர் ஜாமினில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி, மரக்காணம் கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து பஸ் எரிப்பு ஆகிவை தொடர்பாக மீண்டும் சிறையில் தள்ள வாய்ப்பு உள்ளது. மரக்காணம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. அதிமுக, திமுக என்ற கட்சி பேதமில்லாமல் வன்னியர் என்றாலே பிடித்து உள்ளே போடுகிறார்கள்.
வரும் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு செயல்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துபூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


