மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை பகுதியில் தண்ணீரில்லாமலும் பாதுகாப்பில்லாமலும் அழியும் நிலையில் புள்ளி மான்கள் உள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களிலும் கருவேலங்காடுகளிலும் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன.அழிந்து வரும் அரியவகை இனமாக புள்ளிமான்கள் உள்ள நிலையில் சிவரக்கோட்டை பகுதிக்கு எங்கிருந்து எப்படி வந்தது என கிராமத்தினர் கடந்த 3 வருடங்களாக ஆச்சர்யப்படுகின்றனர்.எழுமலையில் உள்ள மலை பகுதிகளிலிருந்தும் சாப்டூரில் உள்ள வனப்பகுதிகளிலும் இருந்து குடிக்க தண்ணீர் இல்லாமல் காட்டாறுகளின் வழியே நேசநேரி கண்மாய்க்குள் இந்த புள்ளி மான்கள் கூட்டம் கடந்த 3 வருடத்திற்கு முன்பு நுழைந்தன.பின்னர் அருகேயுள்ள சிவரக்கோட்டை கண்மாய்க்குள்ளும் புள்ளி மான்களில் ஒரு பிரிவு வாழத்துவங்கின.புள்ளி மான்களோடு சேர்ந்து காட்டுப்பன்றிகளும் இந்தப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
புள்ளிமான் மற்றும் காட்டுப்பன்றிகள் இந்தப்பகுதியில் வாழத் துவங்கிய பின்னர் விவசாயிகள் தங்களின் தோட்டங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.தோட்டங்களில் புகும் காட்டுப்பன்றிகள் பயிர்களை அழித்து விடும்.சில நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோண்டும் நிலங்கள் உழுத நிலம் போல ஆகிவிடும் என விவசாயிகள் கூறுகின்றனர்.கண்மாயில் உள்ள காட்டுப்பகுதியைவிட்டு சிலநேரங்களில் மான்கள் ஊருக்குள் புகுந்து மக்களிடம் பிடிபட்டுள்ளன.சிவரககோட்டை,கள்ளிக்குடி மற்றும் நேசநேரி கிராமங்களில் இதுவரை 5 க்கும் மேற்பட்ட மான்கள் மக்களிடம் பிடிபட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.நேசநேரி,சிவரக்கோ்ட்டை பகுதிகளில் ஆண்களும் பெண்களும பகலிலும் இரவிலும் தங்களின் தானியப்பயிர்களை புள்ளிமான்களிடமிருந்து காக்க காவல் இருந்து வருகின்றனர்.மான்கள் கூட்டம கூட்டமாக மாலை நேரங்களில் தங்கள் தோட்டங்களை நோக்கி வருவதாகக் கூறும் கிராமமக்கள் மான்களை விரட்டி விடுவதால் அவைகள் தண்ணீரைத் தேடி அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சிவரக்கோட்டை கண்மாயிலிருந்து கமண்டலநதி ரயில்பாலத்தின் கீழே உள்ள வழியாக தங்கள் தோட்டக்கிணறுகளில் உள்ள பம்பு செட் தொட்டிகளில் உள்ள தண்ணீரை புள்ளி மான்கள் கூட்டம் பருகி தாகம் தணித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.புள்ளிமானை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் புள்ளிமான்கள் நீரில்லாமலும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலும் சிவரக்கோட்டை பகுதியில் வாழ்ந்து வருகின்றன.எனவே வனத்துறையினர் புள்ளி மான்களை பாதுகாத்து,தேவையான தண்ணீர் கண்மாய் பகுதிகளில் கிடைக்கும்படி தண்ணீர் தொட்டிகள் அமைத்து புள்ளிமான் இனத்தைக் காக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


