காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தனர்.
பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் ஏப்ரல் 30-ம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்ஸை, காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது.
இது தொடர்பாக பா.ம.க.-வைச் சேர்ந்த தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் (50), மேலும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் இளங்கோ (31), முருகேசன் மகன் மாரி (29) உள்பட 12 பேரை பாலுச்செட்டிசத்திரம் போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தாமால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இந்த நிலையில் இதே வழக்கு தொடர்பாக இளங்கோ, மாரி ஆகியோரை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து அவர்களை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லி. சித்ரசேனன் ஞாயிற்றுக்கிழமை (மே 12) உத்தர விட்டார். இதைத் தொடர்ந்து இளங்கோ, மாரி ஆகியோரை போலீஸார் தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது

கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா: மாவட்டக் கல்வி அலுவலா் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியருடன் எம்எல்ஏ ஆலோசனை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
