அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பாட்டில் குடிநீரை சோதனை செய்ய மத்திய அமைச்சர் உத்தரவு

பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரைத் தயாரிக்கும் இடங்களுக்குச் சென்று சோதனை நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On :12 மே 2013, 8:03 am IST

பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரைத் தயாரிக்கும் இடங்களுக்குச் சென்று சோதனை நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீர் தரமானதாக இல்லை என்றும், கலப்படம் நிறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்குப் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்தத் துறையின் அமைச்சர் குலாம் நபி ஆசாத், அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதே போல உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சங்கத்திற்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில் குடிநீர் குடிப்பதற்கு ஏற்றவைதானா என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும்' என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.