விருதுநகர் அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றததால் கணவர் தூக்கிட்டு சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே சத்தியரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவரது மனைவி கனகவள்ளி(27). இரவது கணவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தகராறை தொடர்ந்து கோபித்துக் கொண்டு, அதே கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு கனகவள்ளி கோபமாக சென்றார். பின்னர், அடிக்கடி மனைவியை வாழ வரும் படி அழைத்தற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அமைதியை இழந்த மணிகண்டன் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் தூக்கிட்டு உயிரிழந்தார். இது குறித்து உறவினர்கள் பார்த்து பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


