எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்: இளைஞர் கைது:பெண் தலைமறைவு

சாயல்குடி காவல் நிலைய சரகம், ஒப்பிலானைச் சேர்ந்தவர் முகம்மது கான் மகன் தமீன் அன்சாரி(23). இவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக போலியான பள்ளி படிப்பு சான்றிதழ் கொடுத்திருந்தாராம். இதே

Updated On :12 மே 2013, 1:22 pm IST

பாஸ்போர்ட் பெற பொய்யான ஆவணங்க்ள் கொடுத்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார், இன்று கைது செய்தனர். தலைமறைவான ஒரு பெண் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாயல்குடி காவல் நிலைய சரகம், ஒப்பிலானைச் சேர்ந்தவர் முகம்மது கான் மகன் தமீன் அன்சாரி(23). இவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக போலியான பள்ளி படிப்பு சான்றிதழ் கொடுத்திருந்தாராம். இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த முகம்மது கமீது மகள் ஹன்சியஸ் நஸ்லின் என்பவர் பாஸ்போர்ட் பெற, போலியான பிறப்பு சான்றிதழ் கொடுத்திருந்தாராம்.போலி ஆவணங்கள் தரப்பட்டிருந்ததை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வர ராஜா கண்டு பிடித்து சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட காவல் கண்காணிபாளர் மயில் வாகனன் உத்தரவில் காவல் ஆய்வாளர் லாமேக், தார்பு ஆய்வாளர்கள் இருளப்பன், சண்முகவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, தமீன் அன்சாரியை கைது செய்தனர்.   

முதுகுளத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தமீன் அன்சாரியை 15 நாள காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் சி.மோகன் ராம் உத்தரவிட்டார். தலைமறைவான ஹன்சியஸ் நஸ்லினை சாயல்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.