கரூரில் அண்மையில் போலீஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அண்மையில் 2 நாள்கள் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்றதாக வெங்கமேட்டைச் சேர்ந்த ராஜா, கரூர் தேர் வீதியைச் சேர்ந்த சுந்தரம், பங்களாத் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி, தான்தோன்றி்மலை ராஜேந்திரன், பள்ளப்பட்டி சவுந்திராபுரம் கருப்புச்சாமி, மகாதானபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், எழுநூற்றுமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர், பெட்டாவாய்த்தலையைச் சேர்ந்த ஞானசேகர், கிழக்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஆண்டிவடிவேல் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
விபசார வழக்கில் 8 பேரும், யாகூப் என்பவர் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள 6 வெடிமருந்து குடோன்களும் தணிக்கை செய்யப்பட்டது. பழைய குற்றவாளிகள் 39 பேர் சோதனையிடப்பட்டனர். அனுமதி பெறாமல் இரட்டை மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மதுபானங்களை அனுமதியின்றி விற்றதாக 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் 230 தணிக்கை செய்யப்பட்டதில், சந்தேக நபர்களை விசாரணை செய்து 45 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் கலங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


