விருதுநகர் மாவட்டம் சூளக்கரை பகுதியில் பள்ளிக்கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து மாணவர் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் சூளைக்கரை சேவியர்ஸ் மெட்ரிக் பள்ளியில் விடுமுறை நாட்களை முன்னிட்டு பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேல் தளத்தில் காங்கிரீட் போட்ட இடத்தில் அதன் கீழ் தளத்தில் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த கட்டைகளைப் பிரித்து எடுத்துவந்தனர். அப்போது, மேல் தளத்தில் கான்கிரீட் போட்ட இடத்தில், சுற்றுச் சுவர் கட்டுவதற்காக செங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். அதன் பாரம் தாங்காமல், கான்கிரீட் கீழே சரிந்து விழுந்தது. இதில், சுப்பையா நாடார் பள்ளியில் படிக்கும் மாணவர் மாரிக்கனி என்பவர் உயிரிழந்தார். அவர் விருதுநகர் குமாராபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்து, இந்த வருடம் தேர்வு எழுதியுள்ளார்.
இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். பாண்டி, பிரபு, வெங்கடேஷ், ஜீவரத்தினம், திருவேங்கடம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பாண்டி பிரபு, வெங்கடேஷ் மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்ற இருவரும் விருதுநகர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து சூளைக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

