காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் அழகம்மாள்(23). இதே பகுதியைச் சேர்ந்த அப்பனசாமி என்பவரின் மகன் கருப்பாமி(23). இவர்கள் இருவரும் கடந்த 6 மாத காலமாக நெருங்கி பழகியுள்ளனர். அதோடு, பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருப்பசாமியின் குடும்பத்தினர்
Updated on
1 min read

விருதுநகர் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் மறுத்த காதலர் உள்ளிட்ட குடும்பத்தினர் 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் அருகே ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் அழகம்மாள்(23). இதே பகுதியைச் சேர்ந்த அப்பனசாமி என்பவரின் மகன் கருப்பாமி(23). இவர்கள் இருவரும் கடந்த 6 மாத காலமாக நெருங்கி பழகியுள்ளனர். அதோடு, பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருப்பசாமியின் குடும்பத்தினர் வசதியான பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இதையறிந்த, அழகம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். அதற்கு கருப்பசாமி திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காதலும், அதிக நகை மற்றும் பணம் தருகிற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி மறுத்துள்ளார்.அதோடு, தகாத வார்த்தைகள் பேசியதோடு, எனக்கு தொல்லை கொடுத்தால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியும் உள்ளார்.

இது குறித்து அழகம்மாள் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காதலன் கருப்பசாமி, அவரது தந்தை அப்பனசாமி, தாயர் முனியம்மாள் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com