திமுக., அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கடைசிக் காலம் என்று கூறினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்டதை அடுத்து, சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன,
இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,
சென்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?
திமுக., அதிமுக., இரண்டுக்குமே இது கடைசித் தருணம். நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்... - என்றார்.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துபூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


