ஒசூரில் நடைபாதை உணவுக் கடையில் இரு கோஷ்டிகளுக்கிடையே நடைபெற்ற தகராறில் கத்தியால் இளைஞரை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 7 பேர் வழக்குப் பதிந்து 6 பேரை போலீஸாரை கைது செய்துள்ளனர்.
ஒசூர் நகராட்சி அலுவலகம் எதிரில் தள்ளு வண்டியில் அசைய உணவுகள் வரிசையாக இரவு நேரங்கலில் இயங்கி வரும். இந்தக் கடையில் ராம்நகர் ஜான்பாஷா மகன் ரபீக்(29) மற்றும் அவருடைய நண்பர்கள் கார்த்திக்(27), கோவிந்தன்(27), வினோத்(27) ஆகிய 4 பேர் ஞாயிற்றுக்கிழமை உணவு சாப்பிட்டனர்.
அங்கு ராம்நகரைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவருடைய நண்பர்கள் நவாஸ்(27), புதிய எ.எஸ்.டி.சி அட்கோ பகுதியைச் சேர்ந்த மாலிக்(22) ஆகிய 3 பேரும் சாப்பிட்ட்னர்.
அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ரபீக்கை எதிர் கோஷ்டியினர் கத்தியால் குத்தினர். இதில் ரபீக் படுகாயம் அடைந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இரு தரப்பினரும் ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய ஒசூர் நகர போலீஸார் இரு கோஷ்டிகளைச் சேர்ந்த வினோத், கார்த்திக், கோவிந்தன், மூர்த்தி, நவாஸ், மாலிக் ஆகிய 6 பேரை கைது செய்து ஒசூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொந்தரவு கொடுத்த இளைஞரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாயாவதி எச்சரிக்கை!

'பிரதமர் மோடி தூங்கமாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


