

பழனி அருகே டிராக்டர் மோதியதில் ஒருவர் பலியானார். பழனி அருகே வேப்பன்வலசு 9வது வார்டை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணக்குமார்(24). இவர் பள்ளிக்கூடத்தான்வலசை சேர்ந்த தண்டபாணி என்பவரது டிராக்டருக்கு டிரைவராக உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை டிராக்டரை நிறுத்தியிருந்த போது லோடுமேனாக வேலை செய்யும் வேப்பன்வலசை சேர்ந்த குமரன் மகன் பெருமாள் என்பவர் டிராக்டரை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது சரவணக்குமார் டிராக்டரை நிறுத்துமாறு ஓடியுள்ளார். அப்போது பெருமாள் டிராக்டரை ஓட்டத் தெரியாமல் ஓட்டி சரவணக்குமார் மீது மோதியதில் பலத்த காயமடைந்து ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்து போனார். இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தற்படம் எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு: 13 மணி நேரம் போராடி மீட்ட ராணுவ வீரா்கள்

வேட்புமனு சரிபாா்ப்பு: 20 காரணங்கள்

மே. தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

