சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சொந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில்"நடிகர் கஞ்சா கருப்பின்" வேல்முருகன் போர்வெல்ஸ் சிவகங்கையில் படப்பிடிப்பு - வி.ரவிச்சந்திரன்

கடந்த 20 நாட்களாக சிவகங்கை மற்றும் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Updated On :21 மே 2013, 8:45 am

கடந்த 20 நாட்களாக சிவகங்கை மற்றும் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது குறித்து திரைப்பட இயக்குநர் கோபி தினமணிக்கு அளித்த பேட்டி.

 அங்காடித் தெரு படத்தின் நாயகன் மகேஷ் கதாநாயகனாக நடிக்க வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் திரைப்படம் சிவகங்கை பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையை சொந்த ஊராகக் கொண்ட கஞ்சா கருப்பும், நானும் பங்குதாரராக இணைந்து படம் எடுத்து வருகிறோம். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பகுதி செழுமையாகவும், மற்றொரு பகுதி வறட்சியாகவும் உள்ளது. தண்ணீர் பஞ்சம், போர்வெல் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை படத்தின் மையக் கருவாக இருந்தாலும், நகைச்சுவை, பாடல்கள், காதலுக்கும் படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

 நடிகர் கரண் கதாநாயகனாக நடித்த மலையான் எனது முதல்படம். நடிகர் கஞ்சா கருப்புடன் இணைந்து தயாரிக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் எனது இரண்டாவது படமாகும். இந்தப் படத்தில் அங்காடித் தெரு படத்தின் நாயகன் மகேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆரிசி அவருக்கு ஜோடியாக கதைநாயகியாக உள்ளார். இதேபோல் தீப்பெட்டி கணேசன், பிளாக் பாண்டி உள்பட பலரும் நடிக்கின்றனர். பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், சினேகன், பா.விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளதாக இயக்குநர் கோபி தெரிவித்தார்.

 120 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது.

தண்ணீர் பிரச்சனையை பிரதமர் கூட தீர்க்க முடியாத நிலையில் போர்வெல் லாரி மூலம் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்கும் வேல்முருகன் என்ற பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன். சிவகங்கை போஸ்நகர் எனது சொந்த ஊர் என்பதால் திரைப்படத்தின் மூலம் வளர்ந்த நான் ஊருக்குப் பெருமை சேர்க்க இப்படத்தை சிவகங்கையில் தயாரித்து வருகிறேன் எனறார் நடிகர் கஞ்சா கருப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.