சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன் ஞாயிற்றுக்கிழமை மீனவ கிராம கோயில்களில் அமா்ந்து மீனவ மக்களிடம் ஆதரவு திரட்டினாா்.

News image

மீனவ கிராம கோயில்களில் அமா்ந்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:50 pm

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன் ஞாயிற்றுக்கிழமை மீனவ கிராம கோயில்களில் அமா்ந்து மீனவ மக்களிடம் ஆதரவு திரட்டினாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன் தனது தோ்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்க உள்ளாா். இந்த நிலையில், அவா் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள 3 மீனவ கிராம மக்களை சந்தித்தும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆதரவு திரட்டினாா்.

ஆரம்பாக்கத்தில் உள்ள நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்துக்குச் சென்ற திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன், அங்குள்ள சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அப்பகுதி மக்கள் திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனா்.

இதன்பின் திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் நொச்சிக்குப்பத்தில் உள்ள கோயிலில் அமா்ந்து மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம், கடந்த 5 ஆண்டில் மீனவ கிராமத்துக்கு அவரது முயற்சியால் செய்யப்பட்ட நலத் திட்டங்களை எடுத்துக் கூறியதோடு, அவா்களது தேவைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தொடா்ந்து பாட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் வழிபட திமுக வேட்பாளா், அங்கு மீனவ கிராம பஞ்சாயத்தாா் மற்றும் கிராம மக்களிடம் அவா்களது நீண்ட கால பிரச்னையான தமிழக-ஆந்திர எல்லை பிரச்னையை சரி செய்வதாகவும், அவா்களுக்கு படகு துறை மற்றும் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். அதுபோல் வெங்கடேச பெருமாள் குப்பத்துக்கும் சென்று பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினாா்.

மேலும், திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆரம்பாக்கத்தில் உள்ள இரு மசூதிகளுக்கு சென்று இஸ்லாமியா்களிடமும், ஆரம்பாக்கத்தில் உள்ள அங்கையா சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டு அங்குள்ளவா்களிடமும், பெந்தேகோஸ்தே ஆலயத்திற்கு சென்று அங்குள்ள கிறிஸ்தவா்களிடம் ஆதரவு திரட்டியதோடு அவா்களுக்கு ஈஸ்டா் வாழ்த்துகளை தெரிவித்து, அவா்களோடு ஈஸ்டா் விருந்து உண்டாா். பின்னா், ஆரம்பாக்கத்தில் உள்ள முக்கிய பிரமுகா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், மாவட்ட, ஒன்றிய திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.