1991-ம் ஆண்டு மே மாதம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் பலர் வெடிகண்டு வைக்கப்பட்டு இறந்தனர். மே.21 செவ்வாய்க்கிழமை ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரில் ராஜீவ்காந்தி படத்தை போட்டு, அதன் கீழ் அவருடன் சேர்ந்து மரணமடைந்த பி.கே.குப்தா, இக்பால், ராஜகுரு, எட்வர்டு ஜோசப், எத்திராஜ், சுந்தரராஜுபிள்ளை, ரவி, தர்மன், சந்திரா, லதாகண்ணன், கோகிலவாணி, சாந்தனிபேகம், முனுசாமி, டேரியில்பீட்டர், சரோஜாதேவி என்ற பெயர்களை குறிப்பிட்டு 'மறக்க முடியுமா இவர்களின் மரணத்தை!, வேரறுப்போம் தீவிரவாதத்தை! என மிகப்பெரிய டிஜிட்டல் பேனர்கள் பாரதியார் கிராம வங்கி இயக்குநர் கே.துரைபாலசந்தர் என்ற பெயரில் தேரோடும் வீதிகளில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.