ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் திமுக பிரமுகர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் பலியானார். ஒருவர் காயம் அடைந்தார்.

Updated On :21 மே 2013, 11:14 am

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் பலியானார். ஒருவர் காயம் அடைந்தார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் மெஸ்வின் (59). இவரும் சாத்தான்குளம் அருகில் உள்ள சோலையர்புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் டேவிட் தேவராஜ் (54) என்பவரும் திருச்செந்தூர் சென்றுவிட்டு சாத்தான்குளம் திரும்பி வந்தனர். அப்போது பன்னம்பாறை என்ற இடத்தில் தரைப் பாலத்தின் அருகில் கட்டுப்பாட்டை இழந்த பைக், மரத்தில் மோதி சாலையில் உருண்டது. இதில், ஜோசப் மெஸ்வின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் கையில் காயம் ஏற்பட்ட டேவிட் தேவராஜ் முதலுதவிக்குப் பின்னர் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து  சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.