பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர்கள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு கொடியேற்றி பெளர்ணமி தினத்தன்று திருநங்கைகள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா மே 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அர்ச்சுணன் தபசு. திரவுபதி திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தில்லி, மும்பை, குஜராஜ், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான திருநங்கைகள் பங்கேற்று கூத்தாண்டவரை வணங்கி பூசாரி ராமதாஸ் கைகளால் தாலி கட்டிக்கொண்டனர்.