விருதுநகர் அருகே போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.20 லட்ச மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக 3 பேரை போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது குறித்து மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் கூறியதாவது: பொள்ளாச்சி அருகே கொட்டாணியைப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்.பாரிவேந்தன்(50). இவருக்கு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சப்பாணியேந்தல் கிராமத்தில் 21 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இதற்கான ஆவணங்களை சரிபார்ப்பதற்காக வருகிறார். இந்நிலையில், இக்கிராமத்திற்கு அருகே உள்ள குழலிகுளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரி(50). இவரை நிலம் வாங்க வேண்டும் என கேரளத்தில் உள்ளோர் சிலர் அணுகியுள்ளனர்.
அதன் அடிப்படையில் குறிப்பிட்ட நிலத்தை காட்டியும், இதற்குரிய உரிமையாளர் உயிருடன் இல்லையெனவும் கூறி போலியான ஆவணங்களை பத்திர எழுத்தர் உதவியுடன் போலியான ஆவணம் தயாரித்துள்ளார். அதையடுத்து, 21 ஏக்கர் நிலத்தை கேரளத்தைச் சேர்ந்த கல்பனஞ்சேரி அருகே மணப்புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்கரீம்(45) என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு சாட்சியாக திருச்சுழிப் பகுதியைச் சேர்ந்த கார்மேகம், கேரளத்தைச் சேர்ந்த அப்துல்சலாம்(45) ஆகியோர் சாட்சி கையொழுத்தும் அளித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
உடனே இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நிலமோசடி குறித்து புகார் செய்தார். மேலும், மாவட்ட எஸ்.பி உடனே நடவடிக்கை எடுக்கும் படி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் முத்துமாரி, அப்துல்கரீம், கார்மேகம் 3 பேரை கைது செய்தனர். மேலும், போலியான ஆவணம் தயாரித்த ராமகிருஷ்ணன், வரதராஜன், அப்துல்சலாம் உள்ளிட்டோர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

