லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விலையில்லா கறவை மாடு, ஆடுகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராம சபை கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை

Updated On :22 மே 2013, 12:42 pm

விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபைக் கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் ஆகியவைகள் வழங்கும் திட்டத்தின் சார்பில் குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளின் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில் காரியாபட்டி ஒன்றியத்தில் பனிக்குறிப்பு கிராமத்தில் 31 பேருக்கும், திருச்சுழி-பண்ணைமூன்றடைப்பு-43, விருதுநகர் ஒன்றியத்தில் நல்லான்செட்டிபட்டி-10,  நல்லமநாயக்கன்பட்டி-9 பேர், ராஜபாளையம் ஒன்றியத்தில் மீனாட்சிபுரம்-60 பேர், முத்துச்சாமிபுரம்-89 பேர், சிவகாசி ஒன்றியத்தில் நமஸ்கரித்தான்பட்டி-19 பேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் கீழராககுலராமன்-51 பேர், மல்லிபுதூர்-20 பேர், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் மேலஓட்டம்பட்டி-22 பேருக்கும் என மொத்தம் 354 பயனாளிகளுக்கு வருகிற ஜூன் மாதம் வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல், வருகிற ஜூலை மாதத்தில் குறிப்பிட்ட ஒன்றியங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 544 பேருக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் வழங்குவதற்கு அரசு ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டுவருகிறது.

ஏற்கனவே ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டத்தின் அடிப்படையில் பயன்பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு கிராமக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது. இதில், வருகிற 27-ம் தேதி முதல் ஜூன்-1ம் தேதி வரையில்  பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கிறது. ஏற்கனவே இத்திட்டம் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, வரும் 3-ம் தேதி நடைபெற இருக்கிற கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட  பயனாளிகளின் விவரப் பட்டியலை ஒப்புதலுக்கு வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.