லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு!

வேலூா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வரை 6.61 லட்சம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டும் வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 7:13 pm

வேலூா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வரை 6.61 லட்சம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டும் வழங்கப்படுவதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 1,427 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களில் வியாழக்கிழமை வரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 465 பேருக்கு இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்டத்தில் உள்ள பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டுகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.