விருதுநகரில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் வி்டடு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு முகாமில் ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் மாலை வரையில் தாமதம் ஆனாது.
விருதுநகரில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் கலந்தாய்வு முகாம் காலையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே கலந்தாய்வு முகாம் நடைபெற இருக்கிற கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால், ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் 11.30 மணிக்கு தாமதமாகவே தொடங்கியது. அதேபோல், ஆசிரியர்கள் அனைவரும் நீண்டநேரம் காத்திருந்தனர்.
மேலும், பிற்பகல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுகிறவர்களுக்கான கலந்தாய்வு முகாம் நடைபெற்றது. ஆனால், ஆன்லைன் சரிவர கிடைக்காத காரணத்தால் மாலை 5 மணி வரையில் நடைபெறவே இல்லை. இதனால், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் நீண்டநேரம் காத்திருந்தனர்.
இது குறித்த முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் கூறியதாவது: இணைய தள ஆன்லைனில் கலந்தாய்வு முகாம் நடத்துவதன் மூலம் காலிப்பணியிடம் அனைத்தும் வெளியிடப்படும். அதன் மூலம் காலியிடங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். அதனாலேயே முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், இதுவரையில் ஆன்லைன் செயல்படாததால் ஆசிரியர்கள் அனைவரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

