வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் இரு சக்கர வாகனம் கொள்ளை
கிருஷ்ணகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.


கிருஷ்ணகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி அதியமான் நகரைச் சேர்ந்தவர் செல்வம்(54). இவர் கிருஷ்ணகிரி கே.திரையரங்கம் சாலையில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.
இவரது தந்தையின் கண் அறுவை சிகிச்கைக்காக, கடந்த 21-ஆம் தேதி குடும்பத்துடன் சேலத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை செல்வத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அருகிலிருந்தவர்கள், செல்வத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த செல்வம் வீட்டிற்கு வந்த பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருள்கள் சிதறி கிடந்தது. பின்னர் பீரோவிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், ரொக்கபணம் ரூ.3 ஆயிரம் மற்றும் வீட்டிலிருந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து செல்வம், கிருஷ்ணகிரி வட்டார போலீஸாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், டிஎஸ்பி ம.சந்தானபாண்டியன், ஆய்வாளர்கள் ஜெயசங்கர் மற்றும் போலீஸார் வந்து கொள்ளை சம்பவ நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ரோபோ வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும், இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன பொருள்களின் மதிப்பு சுமார் 6 லட்சம் இருக்கும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...