புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முழுமையான தொகுப்பூதியம் கிடைக்காமல் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அவதி

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு முழுமையாக தொகுப்பூதியம் வழங்கப்படாததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News image
Updated On :24 மே 2013, 3:30 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு முழுமையாக தொகுப்பூதியம் வழங்கப்படாததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் இடைநிலை வகுப்புகளுக்கு உடற்கல்வி, கணினி, ஒவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, ஆங்கிலப் பேச்சு போன்ற பாடங்களில் மாணவர்களின் கல்வியை ஊக்குவித்திட தமிழகம் முழுவதும் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையிலான பகுதி நேர பணியாக 16549 பேர் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரம் எனவும், வாரம் 3 அரைநாட்கள், மாதம் 12 அரை நாட்கள் என்ற ரீதியில் வருகை பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.

விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2013 வரை தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரால் வாய்மொழி உத்தரவிடப்பட்டு 9 நாட்களுக்கான ஊதியம் மட்டுமே பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி நடைபெறாத விடுமுறை நாட்களுக்கு ஊதியம் கிடையாது என தொகுப்பூதியம் முழுமையாக வழங்கப்படவில்லை.

10-ம் வகுப்பு, பிளஸ்டூ பொதுத்தேர்வில் போது பெரும்பாலான பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை கொண்டுதான் பாடம் நடத்தப்பட்டுள்ளது. வருகை பதிவேட்டில் 12 அரை நாட்களுக்கு மட்டுமே கையெழுத்திட அனுமதிக்கிறார்கள். மாதம் முழுவதும் பள்ளி அலுவலக மற்றும் இதர பணிகளை செய்ய தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால் அரசாணைப்படி வழங்கப்பட வேண்டிய தொகுப்பூதியத்தை முழுமையாக வழங்க மறுக்கின்றனர் என பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே ஏப்ரல் 2013 மாதத்திற்கான தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரத்தை விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வழங்கப்பட்டது போல, கடலூர் மாவட்டத்தில் உள்ள பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு வழங்க கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.