விருதுநகர் ரயில்வே காலனியில் வாரந்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வெள்ளிக்கிழமை காலையில் 5 நிமிடம் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.
விருதுநகர் புது ரயில்வே காலனி, பழைய ரயில்வே காலனிப்பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை குநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவும் கடந்த இரண்டு வாரங்களாக தாமதமாகவே விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், காலனிப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிடித்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வரமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வெளியில் இருந்து குடிநீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்கும் வகையில் காலனிப்பகுதியில் சுத்தகரிப்பு மையம் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். எனவே ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி காலையில் 10.30 மணிக்கு குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை நிலையத்தில் திடீரென மறியல் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, விரைந்து வந்த ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பஜார் காவல் நிலைய போலீஸார், ரயில் நிலைய போலீஸார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிநீர் நாள்தோறும் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், அதோடு சுத்தகரிபபு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதையடுத்து, ரயில்வே நிர்வாகத்திடம் கலந்தாய்வு செய்து செய்து தர ஏற்பாடு செய்து தரப்படும் என கூறிய பின்னர் கலைந்து சென்றனர். அதன் பின்னரே 5 நிமிடம் வரையில் நின்று தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

