பர்கூர் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே திருமணமான 3-ஆவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்


:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே திருமணமான 3-ஆவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்
பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கணமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்மன்னன். கூலித்தொழிலாளி. இவரது மகள் கனகா (21). இவர் 8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் மாதவன்(25) என்பவருக்கும் கனகாவை கடந்த 22-ஆம் தேதி இவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். புதுமண தம்பதிகள் கனகா வீட்டில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கனகாவிற்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் மன வருத்தில் காணப்பட்டதாவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கனகா வெளியே சென்றுள்ளர். அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லையாம். இதனால் வீட்டிலுள்ளவர்கள் அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு நாவல்பழம் மரத்தில் கனகா தனது சேலையால் தூக்கிட்டு நிலையில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.
இது குறித்து பர்கூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பர்கூர் டிஎஸ்பி கஜேந்திரன், காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...