இலவச பயண அட்டைகள் பெறும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் புகைப்படங்களை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் பள்ளி திறந்தவுடன் முன் கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதனால், பள்ளிகளுக்கு அருகே விவகார எல்லையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து பணிமனை கிளைகளுக்குச் சென்று படிவம் 1,2 ஐ பெற வேண்டும். அதில், படிவம் 1ல் மாணவர்களின் புகைப்படத்தை ஒட்டி விவரங்களை குறிப்பிட வேண்டும். அதையடுத்து படிவம் 2ல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை குறுந்தகடில் பதிவு செய்து உடனே இலவச பயண அட்டை பெற்ற கிளைகளில் திரும்ப கொடுக்க வேண்டும்.
இக்குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் கிடைத்தவுடன் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இலவச பயண அட்டை விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதனால், பெற்றோர்கள் மாணவ, மாணவிகளின் விவரங்களை அரசு போக்குவரத்துக் கழகத்தில் விரைவாக கொடுக்க கொடுக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

