லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் மாவட்ட ரேசன் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் கூட்டுறவு வங்கி மற்றும் ரேசன் கடைகளில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :25 மே 2013, 1:25 pm

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் கூட்டுறவு வங்கி மற்றும் ரேசன் கடைகளில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சுழி பகுதியில் உள்ள குச்சம்பட்டி மற்றும் புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள வைகை அங்காடிகளில் ஆட்சியர் அதிகாரிகளுடன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான ரேசன் பொருள்களான அரிசி,  பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் முறைப்படி விநியோகம் செய்யப்படுகிறதா, சரியான அளவுகளில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள பொருள்கள் வழங்கும் விநியோக பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் மின்னனு தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

மேலும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் உரிய நேரத்திற்குள் விநியோகம் செய்ய வேண்டும் என விற்பனையாளர்களை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.