இது தொடர்பாக பேரவையில் கேள்வி கேட்க முயன்ற ஜெயலலிதாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.ஒகேனக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, கர்நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இல்லை. ஆளுநர் ஆட்சிதான் நடைபெற்றது.பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.அந்த நேரத்தில் பாஜக சார்பில் கர்நாடகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர் கடைகள் நாசமாக்கப்பட்டன. பஸ்கள் கொளுத்தப்பட்டன. தமிழ்த் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன.இந்த நேரத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்பு கோரி, சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், தமிழர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை.கர்நாடக பாஜகவின் செயல்களைக் கண்டித்து சேப்பாக்கத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவராக இருந்த கேர்.ஆர்.ஜி. தலைமையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர்.