ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறார்கள்.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பிளஸ்2 தேர்ச்சியுடன் உடற்கல்வி பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம் ஆகும். இப்பணிக்கு கட்டாயம் அரசு விதிமுறைப்படி வயது தளர்வு அளிக்கப்படும்.
இவர்களுக்கான உத்தேச பதிவு மூப்பு முன்னுரிமை அற்றவர்களின் விவரம் பின்வருமாறு: ஆதிதிராவிட வகுப்பினர்(பொது)-20.5.2007 வரையும், முன்னுரிமை அற்றவர்கள்(பெண்கள்)-26.3.2004 வரையும், ஆதிதிராவிடர் அருந்ததியினர்(பொது)-21.5.2007 வரையும், பெண்கள்-8.2.2006 வரையிலும், பழங்குடியினர்-20.8.2007 வரையும், பெண்கள்-30.3.2013 வரையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-11.9.2001 வரையும், பெண்கள்-18.8.2003 வரையும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)-11.9.2008 வரையும், பெண்கள்-13.10.2009 வரையும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்(பொது)-11.8.2000 வரையும், பெண்கள்-11.8.2201 வரையும், பகிரங்க போட்டியாளர்(பொது) 17.8.2000 வரையும், பெண்கள்-21.5.2004 வரையும் இருக்க வேண்டும்.
முன்னுரிமை உடையவர்களின் உத்தேச பதிவு மூப்பு(பொது): ஆதிதிராவிடர் வகுப்பினர், ஆதிதிராவிட அருந்ததியினர் வகுப்பினர், பழங்குடி வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்), பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், பகிரங்க போட்டியாளர் மற்றும் ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணம் புரிந்தோர், முன்னாள், இன்னாள் படைவீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசுக்கு நிலம் வழங்கியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 25.5.2013 வரையில் உத்தேச பதிவு மூப்பு இருக்க வேண்டும்.
மேற்கண்ட உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு தகுதியுடையவர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது. அதனால், ஜூன்-6,7 ஆகிய நாள்களில் அனைத்து சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருகின்றவர்கள் விவரம் எக்காரணம் கொண்டும் பரிந்துரை செய்யப்படமாட்டாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

