தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பத்தாம் வகுப்பில் முதலிடம்: கண்மருத்துவராக ஆசைப்படும் ஈரோடு மாணவி பொன்சிவசங்கரி

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஈரோடு மாணவி பொன்சிவசங்கரி தான் கண் மருத்துவராக ஆசைப்படுவதாகக் கூறினார்.

News image
Updated On :31 மே 2013, 6:02 am

ஜபலின் ஜான்

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஈரோடு மாணவி பொன்சிவசங்கரி தான் கண் மருத்துவராக ஆசைப்படுவதாகக் கூறினார்.

பொன்சிவசங்கரி 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்ற 9 பேரில் தானும் ஓர் இடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இவரது தந்தையார் கதிர்வேல். தாயார் ராஜேஸ்வரி. ஈரோடு மாவட்டம் அரசலூர் அருகே வடுகப்பட்டி பொன்தாலிவலசு பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள். பொன்சிவசங்கரி 8ம் வகுப்பு வரை கிராமத்துப் பள்ளியில் படித்துவந்தார். 9ம் வகுப்பு முதல் ஈரோடு இந்துக் கல்வி நிலையத்தில் தங்கிப் படித்துவருகிறார்.. இவர் முதல் மதிப்பெண் பெறுவதற்காக சிறப்பு வகுப்புகள் எதுவும் செல்லவில்லை. பள்ளியில் தங்கிப் படித்த இவருக்கு கண்களில் லேசான பார்வைக் குறைபாடு இருந்துள்ளது. எனவே, தான் ஒரு கண் மருத்துவராகி மற்றவர்களின் குறைபாடுகளைப் போக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.