விருதுநகர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளைஞர் காவல் படையினருக்கான எழுத்துத் தேர்வு வருகிற 10-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
விருதுநகரில் இளைஞர் காவல் படையினருக்கான எழுத்து தேர்வு தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது: இம்மாவட்டத்தில் இளைஞர் காவல் படையில் 320 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்துத் தேர்வு குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே இம்மாவட்டத்தில் இருந்து இப்பணிக்கு 6071 பேர்கள் வரையில் நேரிலும், ஆன் லைன் மூலமும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதில், அனைத்து விண்ணப்பங்களும் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் 1500 பேர் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கபட உள்ளனர். இத்தேர்வு விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, ஆமத்தூர் எ.எ.எ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது.
மேலும், இத்தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீ்ட்டுக்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அவரவர் முகவரிக்கு நேரில் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பு கிடைக்காதவர்கள் ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டுக்களை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 90 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். இதில், பங்கேற்க வருகிற ஒவ்வொரு இளைஞரையும் தீவிரமான பரிசோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சியாமளாதேவி, ஸ்டீபன்யேசுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் சுலைமான், சக்திவேல் உள்ளிட்ட அனைத்து வட்டார துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

