தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் அருகே கடலில் குளித்த மாணவர் சுழலில் சிக்கி மாயம்

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடலில் குளித்த மாணவர் ஒருவர் சுழலில் சிக்கி மாயமானார். அவரை தீயணைப்பு மீட்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On :5 நவம்பர் 2013, 5:19 am

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடலில் குளித்த மாணவர் ஒருவர் சுழலில் சிக்கி மாயமானார். அவரை தீயணைப்பு மீட்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி தானாரபேட்டையைச் சேர்ந்தவர் ஜீவா மகன்கள் ராம்குமார் (17), ராமமூர்த்தி (16). இருவரும் தீபாவளிப் பண்டிகைக்காக சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று ராம்குமார் தம்பி ராமமூர்த்தியிடம் உடைகளை கழற்றி கொடுத்துவிட்டு கடலில் குளித்துள்ளார். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த ராம்குமாரை காணவில்லை. நீண்ட நேரமாகியும் ராம்குமார் கரைக்கு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த தம்பி ராமமூர்த்தி அங்குள்ள மீனவர்களிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து மீனவர்கள் போலீஸாருக்கு, தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். புதுசத்திரம் போலீஸார் மற்றும் பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்புத்துறையினரும் விரைந்து சென்று ராம்குமாரை தேடி வருகின்றனர். மாணவர் ராம்குமார் கடலில் குளித்த போது சுழலில் சிக்கி நீரில் மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.