தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நவ.14-ல் மெய்கண்டதேவ நாயனார் கோயில் கும்பாபிஷேகம்: 4 மடாதிபதிகள் பங்கேற்பு

சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்டதேவ நாயனார் திருக்கோயில் மகா

News image
Updated On :6 நவம்பர் 2013, 12:47 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்டதேவ நாயனார் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வருகிற நவ.14-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. 4 மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

திருவாவடுதுறை ஆதீன 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தலைமை வகிக்கிறார். தருமை ஆதீனம், திருப்பனத்தாள் காசி மடத்து அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான், சிதம்பரம் மெளன மடாதிபதி மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அருளாசி வழங்குகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவ.13-ம் தேதி புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன வைத்தியநாத தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் கிளை ஆய்வாளர் ந.செந்தில்குமார், இந்து ஆலய பாதுகாப்புக்குழு செயலாளர் ஜோதி.குருவாயூரப்பன், சந்திர.பாலசுப்பிரமணிய தேசிகர், கயிலை முத்துகணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.