மதுராந்தகத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. மாவட்ட டி.ஐ.ஜி மஞ்சுநாதன் உத்திரவின்படி மாவட்ட போலீஸ் எஸ்.பி விஜயகுமார் முன்னிலையில் மதுராந்தகம் டி.ஸ்.பி ராசேந்திரன் தலைமையில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் தனிப்படை போலீஸார் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வந்த மதுராந்தகம் தேர் நிற்கும் பின்புறம் உள்ள பங்க் கடையில் வெள்ளிகிழமை காலை திடீர் சோதனை செய்தனர். அப்போது அசாம் மாநில பெயரில் வெளியான 4 வகை லாட்டரி சீட்டுகள், விற்பனை செய்து வைத்திருந்த ரொக்க பணம் ரூபாய் 30 ஆயிரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த கணினி உபகரணங்கள் செல்போன்கள் 4 ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இவைகளின் மொத்த மதிப்பு ரூ 2 லட்சம். இது தொடர்பாக மதுராந்தகம் நகரைச் சேர்ந்த ராஜேசு(38) பாபு(46) அய்யப்பன்(49) துரை(29) ராமமூர்த்தி(50) கணேசன்(56) அருள்மணி(50) ராமசாமி (53) ஆகிய 8 பேர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது குறிதது மதுராந்தகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்ற்வாளிகளை நீதிமன்றத்தில் ஆஐர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

