கடலூர் மாவட்டத்தில் 5 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை வட்டாட்சியராக (வரவேற்பு) பணிபுரிந்த ராஜவேலு, வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று, கடலூர் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராக
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில், 5 வட்டாட்டசியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை வட்டாட்சியராக (வரவேற்பு) பணிபுரிந்த ராஜவேலு, வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று, கடலூர் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சிதம்பரம் ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.விருத்தாசலம் வட்டம், கானாதுகண்டான் கிராமம் தனியார் சர்க்கரை ஆலையில், வடிப்பக அலுவலர் அலுவலக துணை வட்டாட்சியர் சுதாதேவி, பதவி உயர்வு பெற்று, நெய்வேலி வட்டம் 15-ல் உள்ள, நில எடுப்பு தனி வட்டாட்சியராக  நியமிக்கப்பட்டுள்ளார்.திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பதவி உயர்வு பெற்று, கடலூர் தேசிய நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில், வடிப்பக அலுவலர் அலுவலக துணை வட்டாட்சியர் வெங்கட் பதவி உயர்வு பெற்று, கடலூர் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கல்வி உதவித் தொகை பிரிவு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடலூர் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சரவணன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மாவட்ட மேலாளராகவும், இங்கு பணிபுரிந்த பாஸ்கரன், கடலூர் டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராக பணிபுரிந்த தசரதன் இடமாற்றம் செய்யப்பட்டு, கடலூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக  நியமிக்கப்பட்டுள்ளார்.சிதம்பரம் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரங்கராஜன், கடலூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவுக்கும், நெய்வேலி நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியர் முகுந்தன்,  ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்து, ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com