தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்: செளம்யா அன்புமணி

சிதம்பரம் சீனுவாசா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணாமலைநகர் பாட்டாளி மக்கள் கட்சி நகர தலைவர் மு.சுரேந்தர் இல்லத் திருமண விழாவில் அவர் பங்கேற்று பேசியது: மருத்துவர்

News image
Updated On :8 நவம்பர் 2013, 1:12 pm

ஜி.சுந்தரராஜன்

பாமகவினர் சத்தம் மட்டும் போட்டால் பத்தாது. ஆர்ப்பாட்டம் செய்தால் போதாது. மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பு தலைவர் செளம்யா அன்புமணி தெரிவித்தார்.

சிதம்பரம் சீனுவாசா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணாமலைநகர் பாட்டாளி மக்கள் கட்சி நகர தலைவர் மு.சுரேந்தர் இல்லத் திருமண விழாவில் அவர் பங்கேற்று பேசியது: மருத்துவர் ராமதாஸின் தியாகங்களையும், அன்புமணி ராமதாஸின் சாதனைகளையும் மக்களிடையே நாம் கொண்டு சென்று அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். ஐ.நா மன்றத்தில் சிறப்பாக பேசியவர் அன்புமணி ராமதாஸ் என நியுயார்க் மற்றும் ஜெனிவாவில் பேசுகிறார்கள். ஆனால் நாம் இங்கு பேசுவது இல்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அமல்படுத்தியவர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ். எனவே அவரது சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவர் ராமதாஸ் சொல்வது போல் மது, புகையிலை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என செளம்யா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.