தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடலூர்-கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

சபரிமலை சீசனை முன்னிட்டு கடலூர்- கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு நெய்வேலியைச் சேர்ந்த சமூகசேவகர் எஸ்.சகாதேவன் கோரிக்கை

News image
Updated On :9 நவம்பர் 2013, 1:38 pm

ஜி.சுந்தரராஜன்

சபரிமலை சீசனை முன்னிட்டு கடலூர்- கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு நெய்வேலியைச் சேர்ந்த சமூகசேவகர் எஸ்.சகாதேவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதம்: சபரிமலை சீசன், கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் பல்வேறு தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவதை வரவேற்கிறோம். அதே போன்று கடலூர், குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், சேலம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

குறிப்பாக சபரிமலை சீசன் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடலூரிலிருந்து கோயம்புத்தூருக்கு குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், சேலம் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். அதேபோன்று கடலூரிலிருந்து சென்னைக்கு குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக ரயில்கள் விட வேண்டும் என சமூகசேவகர் எஸ்.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.