தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் மூன்று கட்சிகள் தனி, தனியாக ரயில் மறியல்: 308 பேர் கைது

சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம்தமிழர்கட்சி, மதிமுக ஆகிய மூன்று கட்சிகள் தனி, தனியாக ரயில்மறியலில் ஈடுபட்டன. மறியலில் ஈடுபட்ட 308 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :12 நவம்பர் 2013, 9:50 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம்தமிழர்கட்சி, மதிமுக ஆகிய மூன்று கட்சிகள் தனி, தனியாக ரயில்மறியலில் ஈடுபட்டன. மறியலில் ஈடுபட்ட 308 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 254 பேர் கைது:

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமையில் ஊர்வலமாக ரயில்நிலையத்திற்கு சென்று திருச்சி- சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மூத்தநகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ் உள்ளிட்ட 254 பேரை போலீஸார் கைது செய்தனர். இ்ப்போராட்டத்தில் தமிழத் தேசப் பொதுவுடைமை கட்சி, மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழக உழவர் முன்னணி, மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன.

மதிமுகவினர் 27 பேர் கைது:

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தினர் மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள் தலைமையில் ஊர்வலமாக சிதம்பரம் ரயில்நிலையத்திற்கு சென்று செவ்வாய்க்கிழமை காலை வந்த திருச்சி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பி.முருகானந்தம், உதயகுமார் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் மாவட்டச் செயலாளர் புகழேந்தி தலைமையில் ரயில்நிலையத்திற்கு ஊர்வலமாக சென்று சென்னை-திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். மூன்று கட்சிகள் தனி, தனியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரம் நகர போலீஸார், ரயில்வே போலீஸார் ஏராளமானோர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.