தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே திருநாரையூர் கோயிலில் ராஜராஜசோழன் பிறந்த நாள் விழா!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழமன்னன் ராஜ ராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன, எனவே ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராஜராஜன் பிறந்த நாள்

News image
Updated On :12 நவம்பர் 2013, 10:05 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே திருநாரையூர் கோயிலில் ராஜராஜசோழன் பிறந்தநாள் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழமன்னன் ராஜ ராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன, எனவே ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராஜராஜன் பிறந்த நாள் விழா, சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராஜராஜசோழன் 1028-வது பிறந்த நாள் விழா தஞ்சையில் இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பிகள் உதவியாலும், ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அருளாலும் ராஜராஜசோழன் சிதம்பரத்தில் இருந்த திருமுறைகள் கண்டெடுத்ததாக வரலாறு கூறுகிறது. திருமுறைகளை கண்டெடுத்ததால் ராஜராஜ சோழனுக்கு, திருமுறை கண்ட சோழன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது நமது தமிழுலகம்.

திருமுறை கண்ட சோழனுக்கு தஞ்சையில் பெரிய கோயிலை கட்டிய போது கோயில் உள்ளே திருஉருவச்சிலை அமையவில்லை. அங்கே கோயில் முகப்பில் நந்தவனத்தில் தான் சிலை நிறுவப்பட்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் திருநாரையூரில் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார் சன்னதியில் நம்பியாண்டார் நம்பிகளின் அருகில் ராஜராஜ சோழனுக்கு திருவுருவச் சிலை நிறுவி இன்றும் தொடர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருவது சிறப்புக்குரியதாகும்.

செவ்வாய்க்கிழமை ஜென்ம நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் ராஜராஜ சோழனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நிகழ்ச்சிக்கு திருநாரையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவானந்தம்  தலைமை வகித்தார். ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான ட்ரஸ்ட் நிறுவனரும், செயலாளருமான உ.வெங்கடேச தீட்சிதர் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்று ராஜராஜ சோழனின் பிறந்த நாளை கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.