நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தானே புயல் நிவாரண நிதி: 123 மீனவர்களுக்கு விநியோகம்

புதுச்சேரி மீன்வளத்துறையின் மூலம் 123 மீனவர்களுக்கு தானே புயல் நிவாரண நிதியாக ரூ.40.59 லட்சத்தை காலாப்பட்டு எம்.எல்.ஏ. பிஎம்.கல்யாணசுந்தரம் வழங்கினார்.

News image
Updated On :12 நவம்பர் 2013, 5:20 am

சுஜித்குமார்

புதுச்சேரி மீன்வளத்துறையின் மூலம் 123 மீனவர்களுக்கு தானே புயல் நிவாரண நிதியாக ரூ.40.59 லட்சத்தை காலாப்பட்டு எம்.எல்.ஏ. பிஎம்.கல்யாணசுந்தரம் வழங்கினார்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட சின்னகாலாப்பட்டு, கனகச்செட்டிக்குளம், பெரியகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி பகுதிகளில் இயந்திரம் பொருத்திய கண்ணாடி நுண்ணிழை கட்டுமர உரிமையாளர்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.1 லட்சம் வீதம் 191 மீனவர்ளுக்கு வழங்க ரூ.1.91 கோடி அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும் இயந்திரம் பொருத்தப்படாத கண்ணாடி நுண்ணிழை கட்டுமர உரிமையாளருக்கு தலா ரூ.33 ஆயிரம் வீதம் 123 மீனவர்களுக்கு மொத்தம் ரூ.40.59 லட்சத்தை கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.