சேலம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் கைது
சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). திமுக பிரமுகரான இவர் காரை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் பச்சப்பட்டியை சேர்ந்த யூனுஸ். சேலம் சுகவனேஸ்வரர்


சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). திமுக பிரமுகரான இவர் காரை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் பச்சப்பட்டியை சேர்ந்த யூனுஸ். சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், யூனுûஸ ஒரு கும்பல் கத்தியால் குத்தியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த யூனுûஸ போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இவர்களை கத்தியால் குத்தியவர்கள், சுகவனேஸ்வரர் கோயில் அருகே தப்பி செல்லும் போது இரண்டு பேரை போலீஸார் பிடித்தனர். போலீஸாரின் விசாரணையில் மணிகண்டன், சாகுல் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர். இந்த நிலையில் யார் பெரியவன் என்ற தகராறில் இந்த கொலை நடந்துள்ளாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் நகர காவல் ஆய்வாளர் சூர்யமூர்த்தி வழக்கு பதிவு செய்து, முள்ளுவாட்டி கேட் பகுதியை சேர்ந்த சாகுல் அமீத் (24), மேட்டு மக்கான் தெருவை சேர்ந்த ஜியாவுதீன்(23), பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சலாவுதீன் (24), மூணாங்கரடு பகுதியை சேர்ந்த குரு என்கின்ற உமர் (23), முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்த முஸ்தபா (25) மற்றும் சேட்டு (23) ஆகியோரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இவர்கள் 6 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...