விருதுநகரில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி சமாளிக்க முடியாத நிலை இருப்பதால் அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
விருதுநகரில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளுக்காக நகரில் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்டு சரிசெய்யப்படாமல் இருந்து வருகிறது. அதேபோல், பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சுற்றிலும் பாவாலி, புல்லலக்கோட்டை சாலை உள்ள, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பஸ்கள் சென்று திரும்பி வருகிறது. தற்போது, பாவாலி சாலையில் பணி முடிவடையமால் இருப்பதால் தூசி அதிகம் பறப்பதாக கூறி பஸ்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சாலை அகலப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உள்ளூர் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மேம்போக்காக அப்படியே சாலை அமைக்கப்படுகிறது.
அதனால், பஸ்கள் தேசபந்து மைதானம் வழியாகவும், புல்லலக்கோட்டை சாலை வழியாகவும் மட்டும் இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இச்சாலையும் அகலம் குறைவாக இருப்பதால் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்க முடியாத நிலையேற்படுகிறது. மேலும், குண்டும், குழியுமான பகுதிகளில் சிக்கி பேருந்துகள் பழுது ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதுபோன்ற காரணங்களை வலியுறுத்தி பேருந்து நிலையத்திற்குள் திடீரென பஸ்களை நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளியூர் செல்லும் பயணிகள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் சுலைமான் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்களிடம் நகருக்குள் நெருக்கடியான சூழ்நிலையில் பஸ்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர், நடத்துநர் மீது போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பாதாளச் சாக்கடை திட்ட பணிகளை முடித்து சாலையை அகலப்படுத்த வேண்டும். அதோடு, புதிய பேருந்து நிலையத்தையும் விரைவில் இயக்க வேண்டும் என்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பஸ்களை எடுத்துச் சென்றனர். இதனால், (30 நிமிடம்) அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

