அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நகரில் குப்பை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை  பாதிக்கப்பட்டது.

Updated On :14 நவம்பர் 2013, 10:37 am

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நகரில் குப்பை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை  பாதிக்கப்பட்டது.

விருதுநகர் நகராட்சியில் கடந்த 10-ஆண்டுகளாக ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பதிலாக புதிய நியமனம் செய்யப்படாமலே உள்ளது. அதனால், துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைச் சமாளிக்கும் வகையில் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களுக்கு உதவியாக மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் தாற்காலிகமாக துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தேவையான உபகரணங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படாமல் வேலை வாங்கி வருகின்றனர். குறிப்பாக கழிவு நீர் அடைப்பை சரிசெய்யும் போதும், குப்பைகளை அள்ளிப் போடும் போதும் திடீர் ஆபத்துக்களில் சிக்கிக் கொள்கிற நிலையில் உள்ளனர்.

    இதேபோல், சிவகாமிபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் மகளிர் குழுவைச் சேர்ந்த தாற்காலிக பணியாளர் அமிர்தம்(47) என்பவரை பாம்பு கடித்ததது. தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில்  இதுவரையி்ல சிகிச்சை அளிப்பதற்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. அதோடு, துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான சாதனங்களையும் உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளாமல் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகரில் பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.