அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில் முழு எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகள் விருது பெற மகளிர் திட்டம் மூலம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Updated On :14 நவம்பர் 2013, 10:36 am

விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகள் விருது பெற மகளிர் திட்டம் மூலம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிச்சை வெளியிட்டுள்ள செய்திக் குறி்பபு விவரம் வருமாறு: எழுத்தறிவு பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு இன்றியமையாத காரணியாக விளங்குகிறது. அதேபோல், இன்றளவும் ஊரக பகுதியில் ஏழை மகளிர் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறாதவர்களாக இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் குழுக்களில் உள்ள கல்வியறிவற்ற மகளிருக்கு கல்வி அறிவு பெற்ற உறுப்பினர்களை கொண்டு கற்றுத்தர எடுக்கும் கூட்டு முயற்சியை அங்கிகாரம் செய்து விருது வழங்குவதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2013-14 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற 30 ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது.

    எனவே 70 சதவீதத்திற்கு மேல் எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்களை தேர்வு செய்து, அக்கூட்டமைப்புக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் ஆதரவுடன் மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டமும் இணைந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு முழு கல்வி அறிவு அளிக்கப்படும். அதோடு, தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்ற கூட்டமைப்புகளை விருதுக்கு பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 70 சதவீதத்திற்கு மேல் எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகள் வருகிற 25-ம் தேதிக்குள் தங்களின் விண்ணபு்பங்களை அந்தந்த பகுதியின் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) மூலம் பரிந்துரை செய்து திட்ட அலுவலர், மகளிர் திட்டம், ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மகளிர் திட்ட அலுவலர் பிச்சை கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.