சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி குறுக்கு சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர். பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸôர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் ஆவட்டி குறுக்கு சாலையில் வியாழக்கிழமை மாலை ஆட்டோ மீது கார் ஒன்று மோதிய விபத்தில் 6 குழந்தைகளும் 2 ஆசிரியைகளும் காயமடைந்தனர். இந்த விபத்தையடுத்து ஆத்திரமடைந்த ஆவட்டி மற்றும் கல்லூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதே இடத்தில் தொடர் விபத்துகள் நடப்பதாகவும் அதில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் கூறிய பொதுமக்கள் ஆவட்டி குறுக்கு சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து ஏற்கனவே பலமுறை இந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய மக்களை சமாதானம் செய்ய விருத்தாசலம் கோட்டாட்சியர் உதயகுமார், திட்டக்குடி டி.எஸ்.பி. கருணாநிதி முயன்றனர். ஆனால், பொதுமக்களோ தங்கள் கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தனர். பாலம் கட்டப்படும் என்று அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்.
நடிகரும் எம்எல்ஏவுமான சரத்குமாரின் காரும் மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. சரத்குமாரும் இறங்கிவந்து மக்களை சமாதானம் செய்ய முற்பட்டார் ஆனால் பொதுமக்கள் கலையவில்லை. இதற்கிடையே விருத்தாசலம் டிஎஸ்பி வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். சரத்குமார் கார் போராட்ட இடத்தை தாண்டி செல்ல முற்பட்டபோது, பொதுமக்கள் காரை சூழ்ந்து கொண்டனர்.
இதனால், பொதுமக்களை கலைக்க தடியடி நடத்தியது போலீஸ். நாலாப் பக்கமும் சிதறி ஓடி பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர். இரவு நேரம் என்பதால் எங்கிருந்து கற்கள் வருகின்றன என பார்க்க முடியாமல் போலீஸôர் திணறினர். இந்த கல்வீச்சில் போலீஸôரின் வாகனங்கள் சேதமடைந்தன. ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலையில் காயம்பட்டது.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.